Disqus Shortname

சாலையோர குழாய் உடைப்பு பாலாற்று குடிநீர் வீண்

உத்திரமேரூர் 06/06/2023
உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரி பாலாற்றில் இருந்து, கரும்பாக்கத்திற்கு பூமிக்கடியில் குடிநீர் குழாய் புதைக்கப்பட்டுள்ளது. கரும்பாக்கம்- - சீட்டணஞ்சேரி சாலையில், ஒருங்கிணைந்த கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக குருமஞ்சேரி அருகே, தரைபாலம்

கட்டுமானப் பணி நடக்கிறது. தரைபாலம் கட்ட ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது, பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறி பள்ளத்தில் குளம் போல் தேங்கி உள்ளது. கரும்பாக்கம் கிராம மக்கள் கூறியதாவது: கரும்பாக்கம் மற்றும் பழவேரி உள்ளிட்ட சாலைகளில், சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன. இச்சாலைகளின் ஓரத்தில், பாலாற்றில் இருந்து, கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய் புதைக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கப் பணிக்காக, சாலையோரத்தில் பள்ளம் தோண்டும் போது, அடிக்கடி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால், கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. உடைந்த குழாய்கள் அவ்வப்போது சீரமைக்கப்பட்டாலும், மீண்டும் சாலையின் வேறொரு இடத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் நிலை தொடர்கிறது. எனவே, சாலை பணியில் அலட்சியம் காட்டாமல், கவனமாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments