Disqus Shortname

உத்திரமேரூரில் கோவில் புணரமைப்பு பணியின் போது பல லட்சம் மதிப்பிலான பழங்கால தங்க ஆபரணங்கள் கண்டெடுப்பு

 உத்திரமேரூர்


உத்திரமேரூரில் குழம்பர கோவில் தெருவில் ஸ்ரீ குழம்பரேஸ்வரர் கோவில்

உள்ளது. இந்த கோவிலானது இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில்

கட்டப்பட்டது. புராதானமான இந்த கோவிலுக்கு பல இடங்களில் சொத்துக்கள்

உள்ளது. இந்த கோவிலானது பல ஆண்டுகளாக சிதலமடைந்து இடிந்துவிழும்

நிலையில் இருந்தது. கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில்

இல்லாததால், இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர்

தினசரி காலை மற்றும் மாலை வேலைகளில் பூஜைகள் செய்து கோவிலை

பராமரித்து வந்தனர். இக்கோவிலை புணரமைக்க அப்பகுதி மக்கள் பல

ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலில்

விழாகுழுவினர் அமைத்து அவர்களின் உதவியோடு கோவிலை புணரமைக்க

திட்டமிட்டப்பட்டது. அதன்படி கடந்த வியாழக்கிழமையன்று கோவில்

புணரமைக்கும் பணியானது துவங்கியது. இதற்கான கோவிலில் கணபதி

ஹோம்ம், பாலாலயம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோவிலில்

சீரமைக்கும் பணிக்காக கோவில்கள் அப்புறப்படுத்தப்பட்டு பள்ளங்கள்

தோண்டப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை கோவில் வாசல் பகுதியில்

சுமார் 7 அடி ஆழம் வரை தோண்டிய போது அங்கு ஒரு கட்டையாளான

ஒரு பெட்டி கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அதனை எடுத்து

திறந்து பார்த்த போது அதில் பல லட்சம் மதிப்பிலான பழங்கால தங்க

நாணயங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் என சுமார் அரை கிலோ அளவிற்கு

தங்க நகைகள் இருந்துள்ளது. தகவலறிந்த உத்திரமேரூர் போலீசார் மற்றும்

வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில்

இன்று நகைகள் பொது மக்கள் முன்னிலையில் வருவாய்துறையினரிடம்

ஒப்படைக்கப்படும் என்று கூறியதால் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இன்று வருவாய்துறையினரிடம் நகைகள் ஒப்படைத்தபின் விசாரணை

நடத்தப்பட்டு நகைகள் அளவீடு செய்யப்பட உள்ளது.

No comments