Disqus Shortname

உத்திரமேரூரில் மூன்றாம் அலை துவக்கமா என மக்கள் அச்சம்

 

உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.  இந்த குழந்தைகள் காப்பகத்தில் 76 குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அருகில் உள்ள களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் நான்கு குழந்தைகளுக்கு கொரானா தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 4 குழந்தைகளையும் தனிமைப்படுத்தப்பட்டு மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் காப்பகத்தில் மீதமுள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் 13 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் மற்றும் 7 ஊழியர்களுக்கு என மொத்தம் 43 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தொற்றால் பாதிக்கப்பட்ட 43 பேரையும் அங்கிருந்து அகற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காப்பகத்தில் உள்ள மீதமுள்ள குழந்தைகள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் ஊராட்சி நிர்வாகத்துறையினரால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments