Disqus Shortname

வழக்கறிஞர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

உத்தரமேரூர் நீதிமன்ற கட்டுமான பணிகளை உடனே துவக்க வேண்டும் உத்தரமேரூர் வழக்கறிஞர்கள் சங்கம் புதிய அரசுக்கு கோரிக்கை காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் இன்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத் தலைவராக சண்முகசுந்தரம், செயலாளராக, மூத்த வழக்கறிஞர் அ.கருணாநிதி, பொருளாளராக, சந்தானம், அன்பழகன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் புதிதாக பதவியேற்க உள்ள தமிழக அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 1999 ஆம் ஆண்டு முதல் உத்தரமேரூர் குற்றவியல் உரிமையியல் நடுவர் நீதிமன்ற கட்டிடம், குறுகிய இடத்தில், வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. வழக்றிஞர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதியின்றியும், கழிப்பறை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். 48- வழக்கறிஞர்கள் பயிற்சியில் உள்ளனர் அலுவலகப் பணியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். உத்தரமேரூர் காவல் நிலையம், சாலவாக்கம் காவல் நிலையம், பெருநகர் காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், வனத்துறை வழக்குகள், மதுவிலக்கு அமல் பிரிவு, உள்ளிட்ட துறைகள் சார்ந்த வழக்குகளின் விசாரணைகள் இந்த சிறிய நீதிமன்றக் கட்டிடத்தில் குறுகிய இடத்தில் நடைபெற்று வருகிறது. உத்தரமேரூர் வழக்கறிஞர்கள் சங்க தொடர் கோரிக்கைகளை ஏற்று 2019ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் உத்தரமேரூர் வேடபாளையம் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, வரைபடங்களும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் புதிய நீதிமன்ற கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டது . புதிதாக பதவியேற்றுள்ள அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்ற கட்டுமான பணியை உடனே தொடங்க வழக்கறிஞர்கள் சார்பில் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments