Disqus Shortname

உத்திரமேரூரில் போக்குவரத்து இடையூராக சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் பஜார் வீதியில் சாலையோரங்களில் போக்குவரத்திற்கு
இடையூராக பல்வேறு தரப்பினர் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு
செய்யதுள்ளனர். இந்த கடைகளால் காலை மற்றும் மாலை வேலைகளில்
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள்
மட்டுமின்றி பொது மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த
போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலைக்கு செல்வோரும், பள்ளி
கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவியர்களும் குறித்த நேரத்திற்கு குறித்த
இடத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில்
போக்குவரத்திற்கு இடையூராக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை
அகற்றித்தர வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் பகுதி வாசிகள்
பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் பேரூராட்சி
நிர்வாகத்தினர் கடந்த 10 நாட்களாக ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற
வேண்டும் என காலக்கெடு விடுத்திருந்தது. இந்நிலையில் காலக்கெடு
முடிந்தும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றபடாத நிலையில் பேரூராட்சி செயல்
அலுவலர் லதா முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும்
பேரூராட்சி ஊழியர்கள் போக்குவரத்திற்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்பு
கடைகளை அகற்றினர். இதனால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பேரூராட்சி
ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது
நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.

No comments