Disqus Shortname

உத்திரமேரூர் அருகே தூய்மை காவலர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

உத்திரமேரூர் 19/12/2019
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் தூய்மை காவலர்கள் மற்றும்
துப்புறவு பணியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் சிறப்பு மருத்துவ
முகாம் நேற்று நடந்தது. முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி
அலுவலர் சீனுவாசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர்,
மருத்துவர்கள் முஹமதுஅப்துல்லா, தாஸ்பிரசன்னா, மீனா ஆகியோர்
முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சங்கர், சுகாதார உதவியாளர் ராணி
அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் மானாம்பதி, பெருநகர், இளநகர்,
விசூர், கண்டிகை உட்பட 13 ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை
காவலர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு வட்டார மருத்துவ
அலுவலர் டாக்டர் உமாதேவி கலந்து கொண்டு தன்சுத்தம், சுற்றுபுற தூய்மை,
தூய்மைப்பணியின் போது பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதன்
அவசியம் உட்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர்
நடந்த மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், சக்கரை நோய், காய்ச்சல்,
இருதய கோளாறு, பெண்கள் சிறப்பு மருத்துவம் என பல்வேறு சிகிச்சைகள்
வழங்கப்பட்டது. முகாமில் தூய்மை காவலர்கள், துப்புறவு பணியாளர்கள்,
ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பொது மக்கள் என பல்வேறு தரப்பினர்
கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பெற்றவர்களுக்கு இலவச
மருந்து மாத்திரைகள் வழங்கி ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்
அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments