Disqus Shortname

உத்திரமேரூர் மதுராந்தகம் இடையே இயக்கப்படும் பழுதான அரசு பேரூந்தால் மக்கள் அவதி


உத்திரமேரூர் ஆக, 07

மக்களின் அடிப்படை தேவையில் ஒன்றான போக்குவரத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே பேருந்து சேவையின் அடிப்படை. அதிலும் ஏழை, எளிய மக்களே பேருந்துகளில் போக்குவரத்துச் செய்கின்றனர். அதிலும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பேருந்து சேவை ஒன்றே துணை. 
உத்திரமேரூரிலிருந்து மதுராந்தகம் வரை தடம் எண் டி.15, டி.14, 23 ஆகியஅரசு பேரூந்துகள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் இடைப்பட்டகிராமங்களான பட்டஞ்சேரி, குப்பையநல்லூர், மணித்தோட்டம், காரியமங்கலம், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டி, எல்.எண்டத்தூர், பெரும்பாக்கம்உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பள்ளிமற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், வேலைக்கு செல்பவர்கள், பொது மக்கள் என  நாளதோரும் ஆயிரக்கணக்கானோர் தினசரி இந்த அரசு பேரூந்தில் பயணம் செய்கின்றனர். இவ்வாறான இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள்  பெரும்பாளானவை பழுதானதாகவே காணப்படுகிறது. இதனால் இந்த பேரூந்தில் பயணம்  செய்பவர்கள் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல முடியாத அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த பேரூந்தில் முதியவர்கள்,  நோயாளிகள் மற்றும் கற்பிணிப்பெண்கள் மதுராந்தகம், உத்திரமேரூர், எல்.எண்டத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்வர்.  அவ்வாறு செல்பவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய நேரிடும் போது பேரூந்துஆங்காங்கே பழுதாகி நின்றுவிடுகிறது. இதனால் நோயாளிகள் கற்பிணிப்பெண்கள்  மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த வழித்தடத்தில் கிராமப்புறங்கள் அதிகம் உள்ளது, மேலும் அரசு பேரூந்து தவிர  தனியார் பேரூந்துகள் ஓரிரு பேரூந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால்அரசு பேரூந்தையே கிராம மக்கள் நம்பி உள்ளனர். இந்நிலையில் இந்தபேரூந்துகள் பழுதாகி விட்டால் அந்த நேரத்திற்கு இயக்கப்படும் பேரூந்துரத்தாகிவிடுகிறது. இதனால் பயணிகள் ஆங்காங்கே உள்ள பேரூந்து நிலையத்திலேயே  வெகு நேரம் காத்துக்கிடக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. எனவே கிராம  மக்களின் நலன் கருதி இந்த வழித்தடத்திற்கு புதிய பேரூந்தினை இயக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments