Disqus Shortname

பள்ளி கல்வித்துறையில் ஊழலா? நேருக்கு நேர் விவாதிக்கத்தயார்: அன்புமணி ராமதாசுக்கு செங்கோட்டையன் சவால்

உத்திரமேரூர் : பள்ளி கல்வித்துறையில் ஊழல் என குற்றச்சாட்டு கூறும் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அது பற்றி நேருக்கு நேர் விவாதம் நடத்த வருவாரா என அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தின் அரசு உயர்நிலைப் பள்ளி, மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சிக்குப் பின், கல்வித்துறையில் அதிக ஊழல் நடந்திருப்பதாக பா.ம.க மாநில இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணிராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கல்வித் துறையில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. அவர் மருத்துவத்துறை அமைச்சராக இருந்த போது ஊழல்கள் அதிக அளவில் நடந்திருக்கிறது. இதுபற்றி அவர் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? நான் தயார். அன்புமணி ராமதாஸ் தயாரா? எனக் கூற வேண்டும். இடம், தேதியை அவர் அறிவிக்க வேண்டும் என்று சவால் விடுகிறேன். தமிழகத்தின் தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா சான்று, ஆசிரியர் நியமனம், உள்ளிட்ட அனைத்து பள்ளிக்கல்வித்துறை தனித்தன்மையுடனும் வெளிப்படை தன்மையுடனும் செயல்படுகிறது. மேலும் தமிழக மக்கள் எதிர்பாக்கும் நீட் தேர்வு விஷயத்தில் பிரதமரை தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments