Disqus Shortname

அறிவிக்கப்படாத அரசு பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

உத்திரமேரூர் ஆக, 04

உத்திரமேரூரில் அறிவிக்கப்படாத அரசு பஸ் கட்டண உயர்வு மற்றும்
உத்திரமேரூர் பணிமனை நிர்வாகத்தினை கண்டித்து உத்திரமேரூர் பஸ் நிலையம்
அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நேற்று
நடந்தது. ஆர்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு
உறுப்பினர் தர்மராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கணேசன், ஏழுமலை,
ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்டக்
குழு உறுப்பினர் ஜெயந்தி, விநாயகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில்
உத்திரமேரூர் பணிமனையிலிருந்து கிராமப்புறங்களில் இயக்கப்படும்
பேருந்துக்களை நிருத்தி விரைவு பேரூந்து என்று கூடுதல் கட்டணம்
வசூலிக்கப்படுவதை கண்டித்தும். உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்ல
ரூ.12 இல் இருந்து எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி ரூ.16 ஆக உயர்த்தியது,
உத்திரமேரூர் பணிமனைக்கு சொந்தமான பேரூந்துகளை வெளி தடங்களில்
இயக்கப்படுவதை நிறுத்தி மீண்டும் உத்திரமேரூரில் இயக்கிடுக, பணிமனை
நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்திடு, உள்ளிட்டவைகள்
கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments