Disqus Shortname

எழில்சோலை மூலிகை பண்ணையினை காஞ்சி மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு 1001வது மரக்கன்று நட்டுவைத்தார்.

உத்திரமேரூர் ஆக, 03

உத்திரமேரூர் அடுத்த கைத்தண்டலம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி
மாசிலாமணி, இவருக்கு சொந்தமான நிலத்தில் பல வகையான மூலிகை மரம், செடி
கொடிகள் பயிரிட்டு பராமரித்து வருகிறார். இந்த வேளாண் பண்ணையில் சந்தனம்,
வேங்கை, வில்வம், மகாவில்வம், பதிமுகம், நாகலிங்கம் ஆப்பிள், உத்திராட்ச
மரம், போதி மரம், திருவோடு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை மரங்கள் உள்ளன. இதே
போன்று கருந்துளசி, காட்டாமணக்கு, கருநொச்சி, கல்யாண முருங்கை,
வௌ்ளெருக்கம், கருப்புவெற்றிலை, காப்பி, இளமஞ்சு போன்ற மருத்துவ குணமுடைய
செடி வகைகளும் பாரிஜாதம், பவளமல்லி, மனோரஞ்சுதம் போன்ற மலர் வகைகளும்
வளர்க்கப்படுகின்றன.  தற்போது வரை 1000 வகையான மரம், செடி கொடிகள் உள்ளன.
இந்த பண்ணையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னைய்யா நேற்று
பார்வையிட்டு, 1001வது மரமான மகிழம் மரத்தை நட்டு வைத்தார். தொடர்ந்து,
பண்ணையில் உள்ள மரங்கள் மற்றும் அதன் தன்மைகள் குறித்து, பண்ணை
உரிமையாளர் மாசிலாமணி, மாவட்ட ஆட்சியருக்கு விளக்கமளித்தார். அதன் பின்
நடந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில்
வட்டாட்சியர் ராஜம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், பரணி
மற்றும் விவசாயிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments