Disqus Shortname

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிட வேண்டும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர்

உத்திரமேரூர் ஆக, 07

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் இயங்கி வரும் அரசினர்
உயர்நிலைப் பள்ளியினை மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு அதற்க்கான துவக்க விழா நேற்று (07-08-2017)  நடந்தது. விழாவில் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா  தலைமை தாங்கினார். உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், காஞ்சிபுரம்  எம்.எல்.ஏ எழிலரசன், செய்யூர் எம்.எல்.ஏ அரசு, எம்.பி மரகதம் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை மற்றும் இளைஞர்  நலத்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி  துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். இதில் அவர் பேசுகையில் காஞ்சிபுரம்  அண்ணா பிறந்த திராவிட மண்ணில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி  அளிப்பதாக உள்ளது. மேலும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர் தரம்  உயர்த்தப்பட்ட இந்த திருப்புலிவனம் பள்ளிக்கு சுற்று சுவர் இன்றி  பாதுகாப்பில்லாமல் உள்ளது. எனவே தனது சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு  நிதியிலிருந்து ஒரு தொகையினை ஒதுக்கீடு செய்வதாக கூறினார். எனவே தமிழக  அரசு சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு சுற்று சுவர் கட்டித்தர  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர்  பேசுகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள  ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று வேண்டுகோள்  விடுத்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் அந்தந்த பள்ளிகளிலேயே பொது  தேர்வு மையங்கள் அமைத்திட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஊரக தொழில்  துறை அமைச்சர் பெஞ்சமின், மற்றும் அரசு அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள்  மாணவ-மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments