Disqus Shortname

சிறுபினாயூர் கிராமத்தில் வருவாய் திட்ட முகாம்

உத்திரமேரூர் ஆக, 04

உத்திரமேரூர் அடுத்த சிறுபினாயூர் கிராமத்தில்  வருவாய் திட்ட முகாம்
நடந்தது. முகாமில் வட்டாட்சியர் ராஜம்மாள் தலைமை தாங்கினார். சமூக
பாதுகாப்பு திட்ட அலுவலர் அகிலாதேவி முன்னிலை வகித்தார். துணை
வட்டாட்சியர் லோகநாதன் அனைவரையும் வரவேற்றார்.  முகாமில் காஞ்சி தெற்கு
மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு
நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். எம்.எல்.ஏ பொது மக்களிடம்
குறைகள் குறித்து கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும் அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள்
நட்டுவைத்தார். அப்போது சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார், மாவட்ட
இளைஞரணி துணை அமைப்பாளர் பெ.மணி, பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர்
அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட
கோரிக்கைகள் அடங்கிய  68 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது.
அதில் 16 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, மீதமுள்ள 52 மனுக்கள்
கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் வேலு உட்பட பயனாளிகள் பலர் கலந்து
கொண்டனர். முடிவில் , கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ் நன்றி கூறினார்

No comments