Disqus Shortname

தமிழக அரசுக்கு அழிசூர் கிராம மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அகத்திய மாமுனிவரால் பூஜிக்கப்பட்ட தலம் தற்சமயம் பாழடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது. இக் கிராமத்தின் வரலாற்றுப் பெயர் சுங்கம் தவிர்த்த சோழச் சதுர்வேதி மங்கலம் என்பதாகும். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு விக்ரமசோழ மன்னர்களது ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இத்திருத்தலம் தொன்மையான கலைநயமிக்க சிவஸ்தலங்களில் ஒன்றாகும். பல சமூக காரணங்களால் வரலாற்றை

தொலைத்து முட்புதர்கள் சூழ்ந்து சுவர்களும் கருவறை விமானம் முழுவதும் இடிந்து சரிந்து பாழடைந்த கட்டிடம் ஆக காட்சியளிக்கின்றது. தத்ரூபமாக காட்சி அளிக்கும் கலைநயம் மிக்க சிலைகளை பாழடைந்த கோவில் உள்ளே பாதுகாக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்களது படைப்பான இக்கோவிலுக்கு மதில் சுவர்கள் கிடையாது . அதற்கு பதிலாக கற்பலகைகள் கொண்டு சுற்றி எல்லைகள் நிறுவப்பட்டுள்ளன. அவைகளும் தற்போது சரிந்து தரை மட்டமாகி கிடைக்கின்றன. இன்றளவும் ஊர் பெரியவர் ஒருவர் தினமும் விளக்கேற்றி பிரதோஷ வழிபாடுகள் மிக எளிமையாக செய்து வருகிறார். விக்கிரம சோழ மன்னரால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இவ்வாலயத்தை பழமை மாறாமல் உயிர்ப்புடன் புனரமைப்பு பணி மேற்கொள்ள தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments