Disqus Shortname

கொரோனா தடுப்பூசி முகாம்

பெருந்தொற்று தடுப்பூசி முகாம் உத்தரமேரூர் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவில் மருத்துவக் குழுக்களின் உதவியுடன், முழு வீச்சில்முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி , 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான, தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று கருவேப்பம்பூண்டி , மடம், அனுமந்தண்டலம், புலியூர், ஆகிய கிராமங்களில், ஊரக வளர்ச்சி மற்றும் ,ஊராட்சித் துறை ,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, மருத்துவக்குழுவினருடன், உத்தரமேரூர் ஒன்றிய கிராமங்களில், கோவிட்-19- தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்தின் 73 ஊராட்சிகளிலும், தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, வருகிறது. இதையொட்டி உத்தரமேரூர் சுற்றியுள்ள கிராமங்களில் மருத்துவக் குழுவினரால், சிறப்பு முகாம்கள் , அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகள், மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்களை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், வேல்முருகன், ம
ண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், வனிதா, கிராம ஊராட்சிகள் , சிறப்பு அலுவலர் ராஜம்மாள், வட்டார ஆய்வாளர் கல்பனா சாவ்லா, தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன்,அமரேசன், ஆகியோர் நேரில் ஆய்வுகள் மேற்கொண்டு, வீடுவீடாக சென்று தடுப்பூசி போடாத பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, முறையான பரிசோதனைகளை செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசி முகாமில் கிராம மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி வரிசையில், நின்று ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர் முகாமில்பங்கேற்ற அனைவருக்கும், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. உத்தரமேரூர், சாலவாக்கம், மானாமதி, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவ குழுவினர், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். இம்முகாம்களில், பிற்பகல் நிலவரப்படி 325/க்கும், மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் 68-நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

No comments