Disqus Shortname

உத்திரமேரூரில் நடமாடும் காய்கறி அங்காடி துவங்கம்

 உத்திரமேரூர்

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஒருவார காலத்திற்கு எவ்விதத் தளர்வுகளுமின்றி முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதற்கிடையே பொது மக்களின் தேவைகளை பூத்தி செய்யும் நோக்கத்தோடு தமிழக அரசு சார்பில் காய்கறிகளை வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கப்பட்டிருந்தது.அதனடிப்படையில் உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்குவாகனங்கள் மூலம் தினந்தோறும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக நடமாடும் காய்கறி அஙகாடி துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்முத்துகுமார், வேல்முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் லதா ஆகியோர்  தலைமை தாங்கினர். ஒன்றிய நகர செயலாளர்கள் ஞானசேகரன் பாரிவள்ளல், பொறியாளர் அணி சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு நடமாடும் காய்கறி அங்காடியினை கொடியசைத்து துவக்கி  வைத்தார். அதனைத் தொடர்ந்து பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments