Disqus Shortname

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் மற்றும் ராவத்தநல்லூர் கிராமங்களில் மாவட்ட திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு

 உத்திரமேரூர்
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 73 ஊராட்சிகளுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு அதிதியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் நடமாடும் காய்கறி அங்காடி நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நடமாடும் காய்கறி அங்காடி கிராமப்பகுதிகளுக்கு முறையாக செல்கிறதா என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா நேற்று உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஊரடங்கு காலத்தில் கிராமங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை சோதனையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பொது மக்களுக்கு தேவையான அளவு காய்கறிகள் உள்ளனவா, விலைவாசி நிலவரம் குறித்தும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் ஒன்றியத்தில் கொரோனா தொற்று அதிகம் காணப்படும் ராவத்தநல்லூர் ஊராட்சியில் தடைசெய்யப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதில் கொரோனா தொற்றில் பாதிப்பில் உள்ள நபர்களுக்கு குறித்து கேட்டறிந்தார். மேலும் ஊராட்சியில் நடைபெறும் கொரானா பரிசோதனை முகாமை ஆய்வு செய்து மருத்துவ குழுவிற்கு தொடர்ந்து இந்தப் பகுதியை கவனம் செலுத்தி நோய்த்தொற்று குறையும் வரை முகாம்கள் நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், வேல்முருகன் ஊராட்சி செயலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்

No comments