Disqus Shortname

உத்திரமேரூர் அரசினர் ஆதிதிராவிடர் நல பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமில் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான இருதயராணி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மூத்த வழக்கறிஞர்கள் மணி, கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவியர்களின் கட்டாய கல்வியின் அவசியம், கல்வி உதவித் தொகை பெருவதன் வழிமுறைகள், பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுதல், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல், பெண் குழந்தைகளிடம் தெடு முறைகள், சிவில், கிரிமினல் வழக்குகளை சட்டத்தின் மூலம் தீர்வு காணும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவியர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments