Disqus Shortname

வாடாதவூர் கிராமத்தில் மனு நீதி நாள் முகாமில் 120 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


உத்திரமேரூர் 21-11-2019
உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமில் உத்திரமேரூர் வட்டாட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். தனி வட்டாட்சியர் ஞானவேல், மண்டல துணை வட்டாட்சியர் இந்துமதி, சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் கிரிஜா, தமிழ்செல்வம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி சார் ஆட்சியர் சரவணன், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். முகாமில் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை 28 நபர்கள், விதவை சான்று – 01 நபர், கல்வி உதவித்தொகை – 21 நபர்கள், திருமண உதவித் தொகை – 03 நபர்கள், இயற்கை மரணம் மற்றும் இமச்சடங்கு உதவித் தொகை – 05 நபர்கள், சிறு, குறு விவசாயி சான்று – 01 நபர், வாரிசு சான்று – 06 நபர்கள், வேளாண்துறை பயனாளிகள் – 05 நபர்கள், இல்வச வீட்டுமனைப் பட்டா – 50 நபர்கள், என மொத்தம் - 120 பயனாளிகளுக்கு ரூ, 27 லட்சத்து 01 ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்தி மூன்று மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மனு நீதி நாள் முகாமினையொட்டி சுகாதார துறை, கால்நடைத்துறை வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை என பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறை ரீதியாக அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவது குறித்தும் விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் வாடாதவூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். நிகழ்ச்சியில் அரசுதுறை அலுவலர்கள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments