Disqus Shortname

உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா


உத்திரமேரூர்
உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் உத்திரமேரூர் வட்டார கிளை நூலகம், டாக்டர் மா.செ.மாத்தமிழ் மாளிகை ஆராய்ச்சி மையம் மற்றும் உத்திரமேரூர் உயர்த் தமிழ் ஊஞ்சல் அமைப்பு இணைந்து குழந்தைகள் தின விழா, நூலக வார விழா மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தெபொராள் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் வட்டார கிளை நூலகர் சரஸ்வதி, டாக்டர் மா.செ.மாத்தமிழ் மாளிகை தலைவர் கோபிகிருஷ்ணா, உத்திரமேரூர் உயர்த் தமிழ் ஊஞ்சல் தலைவர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பட்டதாரி ஆசிரியர் உமாராணி, துணை தலைமை ஆசிரியை நீலாவதி அனைவரையும் வரவேற்றனர்.முன்னதாக குழந்தைகள் தின விழாவை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவிகளுக்கிடையே கட்டுரை, கவிதை, பாட்டு மற்றும் விளையாட்டு என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. நூலக வார விழாவினை நினைவு கூறும் விதமாக புத்தகம் வாசிப்பதன் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்தும் வாசிப்பு பழக்கத்தினை மாணவர்களிடையே ஏற்படுத்துவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இறுதியில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுநிகழ்ச்சியில் பன்னாட்டு மொழியாய்வு மைய இயக்குநர் பேராசிரியர் முரசொலி .முருகானந்தம் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றமாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். முடிவில் தமிழ் ஆசிரியை கிதாலட்சுமி நன்றிகூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

No comments