Disqus Shortname

மழை பெய்தும் வரண்டு காணப்படும் உத்திரமேரூர் ஏரி

உத்திரமேரூர் 24-09-2019
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக பெரிய ஏரிகளில் ஒன்றானது உத்திரமேரூரில் உள்ள வைரமேகன் தடாகம் என்றழைக்கப்படும் உத்திரமேரூர் ஏரி. இந்த ஏரி சுமார் 2719 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏரியில் 8 மதகுகள் மூலம் நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்படுகிறது. ஏரியில் இருந்து வெளியேரும் உபரி நீரில் வேடபாளையம்,  காக்கநல்லூர், முருக்கேரி, நீரடி, புலியூர், குப்பையநல்லூர். காவனூர்புதுச்சேரி, காட்டுப்பாக்கம், பட்டஞ்சேரி, ஓங்கூர், நல்லூர் உட்பட 18 ற்கும் மேற்ப்பட்ட  கிராங்களில் உள்ள சுமார் 5462 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயிகள் பயன்பெறுவர். ஏரி முழு கொள்ளளைவை எட்டினால் விவசாயிகள் முப்போகம்  பயிரிடுவர், இதில் பெரும்பாலும் நெல், கரும்பு, வேர்கடலை உள்ளிட்ட பயிர்வகைள் விவசாய நிலத்தில் பயிரிடப்படும். விவசாயம் மட்டுமின்றி இந்த ஏரி உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளம், குட்டை என பல்வேறு நீர்நிலைகளுக்கு மிக முக்கிய நீராதரமாகவும் விளங்குகிறது. இது மட்டுமின்றி உத்திரமேரூர் சுற்றியுள்ள
கிராமப்புறங்களில் உள்ள கால்நடைகள் மற்றும் பொது மக்களின் முக்கிய
குடிநீராதாரமாகவும் உள்ளது. இவ்வாறான உத்திரமேரூர் ஏரியின் பெரும்பாலான நீர் வரத்துகால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால், கால்வாய்களில் பெரும்பாளான இடங்கள் பிளாட்டுகள், கட்டடிடங்கள் என பல வகைகளில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் மழை நீர் ஏரிக்கு வந்து சேராமல் வீணாகிறது. இதனால் எவ்வளவு மழை பெய்தாலும் இந்த ஏரிக்கு மட்டும் மழைநீர் வந்து சேர்வதில்லை. அனுமந்தண்டலம் கிராமத்திலிருந்து ஒரே கால்வாய் மட்டும் தற்போது உள்ளது. இந்த கால்வாயும் செய்யாற்றில் வெள்ளம் வந்தால் மட்டுமே
ஆற்று நீர்வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் உத்திரமேரூர் ஏரி மட்டும் நீர்வரத்து இன்றி வறண்டே காணப்படுகிறது. ஏரி நீர் வரத்தில்லாமல் உள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பதோடு ஏரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் ஏரியினை பார்வையிட்டு கால்வாய்கள் சீரமைத்து ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments