Disqus Shortname

சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதி பங்கேற்பு

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் செயல்படும் தனியார்
ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உத்திரமேரூர் வட்ட சட்ட பணிகள்
குழு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த சட்ட
விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமில் தனியார் ஆதரவற்ற
குழந்தைகள் காப்பக நிர்வாகி கணேஷ்குமார் தலைமை தாங்கினார். மூத்த
வழக்கறிஞர் கருணாநிதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் உத்திரமேரூர் உரிமையியல்  மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான இருதயராணி கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விளக்கமளித்தார். மேலும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல்  தொந்தரவுக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காண்பது, குழந்தை தொழிலாளர் அகற்ற அனைவரும் பள்ளிக்கு செல்ல வேண்டும், மேலும் புத்தகங்கள்  மற்றும் நாளிதழ்களை படிப்பதன் மூலம் தங்கள் அறிவுத்திறனை வளர்க்க உதவும் எனவே பள்ளி பயிலும் மாணவ-மாணவியர்கள் அனைவரும் தினசரி புத்தகம் மற்றும் நாளிதழ்களை படியுங்கள் என்றார். நிகழ்வின் போது  ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து இனிப்புகள் வழங்கி வாழ்த்தினார். முடிவில் உத்திரமேரூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆதரவற்ற  குழந்தைகளுக்கு நிதிஉதவி அளித்தனர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள்  தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments