Disqus Shortname

உத்திரமேரூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா

உத்திரமேரூர் செப், 17

உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் நகர பா.ஜ.க சார்பில் பாரத பிரதமர் நரேந்திர
மோடியின் 69 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜவேலு தலைமை
தாங்கினார். நகரத் தலைவர் பிரேம்குமார், பொதுச் செயலாளர் ராமச்சந்திரன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகர் அணி நிர்வாகி சீனுவாசமூர்த்தி
அனைவரையும் வரவேற்றார். முன்னதாக பா.ஜ.க கட்சியினர் பஜார் வீதியில்
உள்ள பாஜக கட்சிக் கொடியினை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள்
வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உத்திரமேரூர் அரசு பொது மருத்துவனை
வளாகத்தினை பேரூராட்சி நிர்வாகதினரோடு இணைந்து பா.ஜ.கவினர்
தூய்மை பணியில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவமனையில் உள்ள
நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பா.ஜ.க
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.