Disqus Shortname

முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக் கலசம் உத்திரமேரூர் வருகை பல்வேறு கட்சியினர் அஞ்சலி


உத்திரமேரூர் ஆக 26
முன்னாள் பாரதப் பிரதமரும் மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து ஹரித்துவார் கங்கை நதிக்கரையில் குடும்ப உறுப்பினர்களால் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் அவரின் அஸ்தி புனித நதிக்கரைகள் கடல்களில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக பாஜக மாநில தலைவர்களிடம் வாஜ்பாயின் அஸ்தி கலசம் வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, ஆகியோர் அஸ்தி அடங்கிய கலசத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசைசௌந்தரராஜன் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் வழங்கினர். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, காஞ்சிபுரம் வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் மாநில செயலாளர் கே.டி.ராகவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பலராமன், மாவட்ட தலைவர் செந்தமிழ்அரசு ஆகியோர் முன்னிலையில் பென்னலூர், அம்மையப்பநல்லூர், வேடபாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி ஊர்வலமாக வந்தது. பின்னர் உத்திரமேரூர் பஜார் வீதி வழியாக பஸ் நிலையம் வந்தடைந்த வாஜ்பாய் அஸ்திக் கலசத்தினை பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் பாஜக பொதுக்குழு உறுப்பினர் ராஜவேலு, நகரத் தலைவர் பிரேம்குமார், பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றியத் தலைவர் பாலாஜி, ஒன்றிய பொதுச் செயலாளர் வீரபத்திரன் உட்பட பாஜகவினரும், திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாரிவள்ளல், செயற்குழு உறுப்பினர் நாகன் உட்பட திமுகவினர் மற்றும் பொது மக்கள் வாஜ்பாய் அஸ்திக் கலசத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்,

No comments