Disqus Shortname

தேமுதிக தலைவர் பிறந்த நாளை யொட்டி பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா

உத்திரமேரூர் 23  
உத்திரமேரூர் ஒன்றிய தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
பிறந்தநாளை யொட்டி உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் பகுதியில்
செயல்பட்டு வரும் திருவள்ளுவர் ஆதரவற்ற இல்லத்தில் பயிலும் 376
மாணவ-மாணவியர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி பள்ளி உபகரணங்கள்
வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் அழிசூர்
கன்னியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் வடிவேலு, சிவா,
கார்த்தி தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட
செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு ஆதரவற்ற மாணவ-மாணவியர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தினார். பின்னர்
அறுசுவை உணவு வழங்கப்பட்டது. உணவு அருந்தும் முன் ஆதரவற்ற
மாணவ-மாணவியர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீடூடி வாழ
வேண்டுமென இறைவனை பிராத்தனை செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்டபொருளாளர் ஜெயராஜ், இளைஞரணி நிர்வாகி அருண்குமார் உட்பட 
 பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.