Disqus Shortname

உத்திரமேரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்


உத்திரமேரூர் 09
உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்பாட்டத்தில் தொகுதி செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ள குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ. 5 ஆயிரமும், மத்திய அரசு சார்பில் ரூ.7500 ம் வழங்க வேண்டும், கொரோனா பரிசோதனை மையங்களை விரிவுபடுத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று கொரோனா தொற்று பரிசோதனை செய்திட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தினை 200 நாளாக
மாற்றிட வேண்டும், கொரோனா காலம் முழுவதும் மின்கட்டத்தினை முழுமையாக ரத்து செய்திட வேண்டும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு
வந்த இலவச மின்சாரத்தினை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுத்திட
வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது.அனுமதியின்றி ஆர்பாட்டம் நடத்தியதால் உத்திரமேரூர் போலீசார்
கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

No comments