Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றியத்தில் 3 கிராம ஏரிகளில் குடிமராமத்துப் பணி துவக்கம்

உத்திரமேரூர் 12/06/2020
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலையாங்குளம் கிராமத்தில் 750
ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியும், வயலக்காவூர் கிராமத்தில் 350 ஏக்கர்
பரப்பளவு கொண்ட ஏரியும், பெருங்கோழி கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பளவு
கொண்ட ஏரியும் உள்ளது. இந்த ஏரிகளை பல ஆண்டுகாலமாக
தூர்வாரப்படாமல் மதகுகள் பழுதடைந்து மழைநீர் வெளியேறி வந்தது.
இதனால் ஏரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் பயிரிட வழியின்றி அவர்களின்
வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்தது. இது குறித்து விவசாயிகள்
தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். அதன் பேரில்
குடிமராமத்து பணித் திட்டத்தின் கீழ் மலையாங்குளம் ஏரிக்கு ரூ.45
லட்சமும், வயலக்காவூர் கிராம ஏரிக்கு ரூ. 36 லட்சமும், பெருங்கோழி
கிராம ஏரிக்கு ரூ.40 லட்சமும் ஒதுக்கீடு செய்து ஏரியினை தூர்வாரி
மதகுகளை சீரமைத்திடும் பணிக்கான துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவில் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் கணேசன்
கலந்து கொண்டு குடிமராமத்து பணியினை துவக்கி வைத்தார். பின்னர்
விவாசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

No comments