Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சி சொத்து வரி செலுத்துவோருக்கு 5% போனஸ்! அக்டோபர் 31 கடைசி தேதி!

உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

சொத்து வரியை உரிய காலத்திற்குள் செலுத்தும் பொதுமக்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனப் பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தும் பொதுமக்களுக்கு இந்த 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்களது சொத்து வரியை எளிதாகவும் விரைவாகவும் செலுத்துவதற்காக வாட்ஸ்அப், அதிகாரப்பூர்வ https://dtp.tn.gov.in/ இணையதளம் மற்றும் கியூஆர் கோடு மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தங்களது சொத்து வரியைச் செலுத்துமாறு பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.



No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.