Disqus Shortname

உத்திரமேரூரில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

 உத்திரமேரூர்:


உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் லயோலா மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய “நெகிழியை ஒழிப்போம்; இயற்கையைப் பாதுகாப்போம்” என்ற விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது.

பேரூராட்சி மன்றத் தலைவர் பொன். சசிகுமார் தலைமை தாங்கி, பேரணியைத் தொடங்கி வைத்தார். லயோலா மேல்நிலைப்பள்ளி நிர்வாகி மரிய ஜோசப் மகாலிங்கம், தாளாளர் ஆரோக்கிய செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர். நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் வியாபாரிகளுக்கு மஞ்சள் துணிப்பைகளும் வழங்கப்பட்டன.

பேரூராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய இந்தப் பேரணி, பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.