Disqus Shortname

உத்திரமேரூர் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி உபகரணங்கள் மற்றும் அறுசுவை உணவு வழங்கும் விழா

உத்திரமேரூர் 24/08/2019
உத்திரமேரூர் ஒன்றிய தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
பிறந்தநாளை யொட்டி உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில்
செயல்பட்டு வரும் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பயிலும்
300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா,
பென்சில் உட்பட பள்ளி உபகரணங்கள் வழங்கி அறுசுவை உணவு
வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் அழிசூர்
கன்னியப்பன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வீரமணி, இளைஞரணி
நிர்வாகி அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி தெற்கு
மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு ஆதரவற்ற மாணவ-
மாணவியர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். பின்னர்
அனைத்து மாணவ-மாணவியர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
உணவு அருந்தும் முன் ஆதரவற்ற மாணவ-மாணவியர்கள் தேமுதிக
தலைவர் விஜயகாந்த் நீடூடி வாழ வேண்டுமென பிராத்தனை செய்தனர்.
நிகழ்ச்சியில் தனியார் ஆதரவற்ற காப்பக ஊழியர்கள் மாணவ-மாணவியர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments