Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அரசு கல்லூரியில் புதிய பாடத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் விநியோகம்

உத்திரமேரூர் 24/08/2019
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாக்டர்
எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019 – 20 இக்கல்வி
ஆண்டில் இளங்கலை பாடப்பிரிவில் புதியதாக பி.ஏ பொருளியியல்
பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 19.08.2019
முதல் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் 27.08.2019
தேதி மாலை 5 மணி வரை வழங்கப்படும். இந்த பாடப்பிரிவிற்கான
கலந்தாய்வு 29.08.2019 காலை 9.30 மணியளவில் கல்லூரியில் நடைபெற
உள்ளது என கல்லூரி முதல்வர் க.சு.மீனா அறிவித்துள்ளார்.

No comments