Disqus Shortname

மனு நீதி நாள் முகாமில் 94 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

உத்திரமேரூர், மார்ச், 22

உத்திரமேரூர் அடுத்த அருங்குன்றம் கிராமத்தில் நேற்று மனுநீதி நாள்
முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட சார் ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை
தாங்கினர், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அகிலாதேவி, வட்டாட்சியர்
ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டாட்சியர் லோகநாதன்
அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி உதவித் தொகை 11
நபர்களுக்கும், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை 11
நபர்களுக்கும், விதவை உதவித் தொகை – 01 நபருக்கும், புதிய குடுமப அட்டை
பெயர் சேர்த்தல், நீக்கல் 71 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. முகாமில்
அருங்குன்றம் மற்றும் அதை சுறறியுள்ள கிராம மக்களிடமிருந்து 151 மனுக்கள்
பெறப்பட்டது. மனு நீதி நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமில் மானாம்பதி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும்
மருத்துவக் குழு மருத்துவர் பாரதிதாசன் மற்றும் மருத்துவக் குழுவினர்
சிகிச்சை அளித்தனர். அருங்குன்றம், நெற்குன்றம், நீர்குன்றம் உள்ளிட்ட
கிராமங்களை சேர்ந்த 96 பேர் சிகிச்சை பெற்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு
அரசு அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட
பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அருங்குன்றம் வருவாய் ஆய்வாளர்
கோமளா நன்றி கூறினார்.

No comments