Disqus Shortname

அத்தியூர் கிராமத்தில் மஹா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் பிப், 06

உத்திரமேரூர் ஒன்றியம் அத்தியூர் கிராமத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி
சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
நேற்று நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகத்தை யொட்டி கடந்த இரண்டு
நாட்களும் கோபூஜை, குருபூஜை, விநாயகர்பூஜை, காப்புகட்டுதல், கோபுரகலசம்,
ஸ்தாபிதம், சிலைகள் அர்த்த மண்டபத்தில் அமைத்தல் முதல்காலயாகபூஜை,
இரண்டாம் கலசங்கள், வேள்வி கலச பூஜைகள் பூர்ணாஹீதி தீபாராதனை, புதிய
பிம்பங்கல் தீருவீதியுலா, விமான கலச ஸ்தாபணம், அஷ்டபந்தணம் சாத்துதல்,
விஷேஷ சந்தி, ஆசார்யவர்ணம்,  உள்ளிட்டவைகள் நடந்தது. இதை தொடர்ந்து காலை
மூன்றாம் கால கலசவிளக்கு, கணபதி ஹாமம், முடிந்ததும்  நான்காம் காலயாக
பூஜையில் ஸபர் சாருதி, தத்வார்சனை திரவியாகுதி, யாக சாலையில் இருந்து
கடம் புறப்பட்டு  புனித நீரை கலசத்தின் மீது ஊற்றி பொது மக்களின் மீது
புனித நீர் தெளிக்க கும்பாபிஷேகம் சிறப்பாக நடைப்பெற்றது. பக்தர்களுக்கு
அறுசுவை உணவு அன்னதானம் மற்றும் சமபந்தி போஜனம் நடைபெற்றது. சுற்றுவட்டார
ஊர்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  விழாவிற்கான ஏற்பாடுகளை
ஆலய வழிபாட்டுத்தலைவர் ரா.பெருமாள், முரளி, சிவலிங்கம், கண்ணன், திமுக
கிளை செயலாளர் தர்மலிங்கம், சசிகலாபெருமாள், மற்றும் ஊர்
பொதுமக்கள்சிறப்பாக செய்திருந்தனர்

No comments