Disqus Shortname

உத்திரமேரூர் அருகே செய்யாற்று தரைப்பாலம் சேதம் இடிந்து விழும் அபாயம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தின் மீது செல்லும் வாகனம்.
உத்திரமேரூர் டிச 21 
உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் வெங்கச்சேரி மாகரல் இடையே செய்யாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது இப்பாலமானது சுமார் 70 வது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயா்காலத்தில் கட்டப்பட்டது. இப்பாலம்  உத்திரமேரூர் காஞ்சிபுரம் இடையேயான போக்குவரத்திற்கான ஒரு முக்கிய  இணைப்பு பாலமாக உள்ளது. இந்த பாலம் வழியே தினசரி உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர்  பள்ளி, கல்லூரி வேலை நிமர்த்தமாக இருசக்கர வாகனம், கார், வேன், பஸ் உள்ளிட்டவைகளின் மூலம் இப்பாலத்தை கடந்து செல்கின்றனர். 5ண்டுகளாக செய்யாற்றுப்படுகையில் தொடர் மணல் கொள்ளை காரணமாக கடந்த ஆண்டு பெய்த கன
வெங்கச்சேரி - மாகரல் சாலையில் செய் யாற்றின் குறுக்கே உள்ள தரை பாலம் வர்தா புய லால் சேதமடைந்து மணல் மூட்டைகள் சரிந்துள் ளது
மழையில் ஆற்றுபடுகையில் மணல் அறிப்பு ஏற்பட்டு பாலமானது வழுவிழந்து  உடைந்ததுவிட்டது, இதனால் உத்திரமேரூர் காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பபட்டது. இதனால் 28 கி.மீ தூரம் உள்ள  காஞ்சிபுரத்திற்கு செங்கல்பட்டு, வாலாஜாபாத் வழியாக 62 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்ப்பட்டது. இதனால் பொது மக்கள்
மாணவ-மாணவியர்கள் பெரிதும் சிறமத்திற்குள்ளாகினர். இதையடுத்து மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக பாலம் சீரமைக்கப்பட்டது. தற்போது ஒரு வருடமாகியும் புதிய பாலம் அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் வீசிய வர்தா புயல்  காரணமாக பாலம் மீண்டும் சேதமடைந்தது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும் போது இடிந்து விழும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் உத்திரமேரூர்  காஞ்சிபுரம் இடையே பயனம் செய்யும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணம் செய்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் நாங்கள் காஞ்சிபுரம் செல்ல
இப்பாலத்தை நம்பியே உள்ளோம் கடந்த ஆண்டு பெய்த மழையின் போதே இப்பாலம் உடைந்து விட்டமையால் எங்கள் பகுதி முதியவர்கள் மருத்துவமனைக்கு செல்லமுடியாமலும், மாணவ, மாணவியர்கள் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமலும் பெரிதும் அவதிக்குளானோம். அப்போது சேதமாக பகுதிவரை பாலத்தினை  தற்காலிகமாக சரிசெய்த மாவட்ட நிர்வாகத்தினர் புதிய பாலம் விரைவில்  அமைத்துத்தருவதாக வாக்குறுதியளித்தனர் ஆனால் இதுநாள் வரை இப்பாலம்  சரிசெய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது பெய்த மழைக்கு இப்பாலம் மிகவும்  பழுதடைந்து விட்டது. எதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் இப்பாலத்தை  சீரமைத்து புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.

No comments