Disqus Shortname

உத்திரமேரூர் அருகே சோமநாதபுரம் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய திருத் தேரோட்டம்

உத்திரமேரூர் 
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சோமநாதபுரம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய திருவிழா கடந்த இருதினங்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. காப்பு கட்டிய நாள் முதல் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு வீதியுலா வந்து காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து மூன்றாம் நாளான நேற்று திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவையொட்டி மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி சோமநாதபுரம் கிராமம் முழுவதும் மேளதாளங்கள் முழுங்க வானவேடிக்கைகளுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் தேங்காய் உடைத்தும் தீவாராதனை காண்பித்தும் அம்மனை வழிபட்டனர். இரவு திருத்தேர் நடையை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் தெருக் கூத்து நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைத்து சிறப்பாக செய்திருந்தனர்.

No comments