Disqus Shortname

உத்திரமேரூர் அருகே காவனூர்புதுச்சேரி கிராமத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர் 12/06/2023

 உத்திரமேரூர் அடுத்த காவனூர்புதுச்சேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் உரிமை தோழமை கூட்டமைப்பு, சர்வோ டிரஸ்ட் மற்றும் ஏ.சி.டி.எஸ் இணைந்து குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பேரணியில் சர்வோ டிரஸ்ட் நிர்வாகி கலைச்செல்வி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு காவனூர்புதுச்சேரி கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் நிகழ்வின் போது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணியிலும் ஈடுபடுத்த மாட்டேன், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்ற வரை பாடுபடுவேன் எனவும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments