Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பென்னலூர் கிராமத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

 உத்திரமேரூர் 10/06/20203

 உத்திரமேரூர் அருகே பென்னலூர் கிராமத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தனி வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் மங்கைவேங்கையன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் மின்னணு குடும்ப அட்டை தொடர்பான குறைகள், மின்னணு குடும்ப அட்டைகளில் ஆதார் எண் மற்றும் கைபேசி எண் இணைத்தல், புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 25 மனுக்கள் பொது மக்களிடம் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments