Disqus Shortname

உத்திரமேரூர் அருகே சுற்றுச்சூழல் தின விழாவில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

உத்திரமேரூர் 
உத்திரமேரூர் அருகே நெல்வேலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நேற்று நடைப்பெற்றது. விழாவில் காவேரி கூக்குரல் இயக்கம் திட்ட ஒருங்கிணைப்பாளர் பரத் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணபிரியா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ- மாணவியர்களுக்கு மண்ணுக்கேற்ப மரங்களை தேர்வு செய்து மரம் நடுவது, அதனை பராமரிப்பதும் குறித்தும் மரங்கள் வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள், மரங்கள் அழிப்பினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவியர்கள் உட்பட அனைவருக்கும் இலவசமான பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஒரு கோடி மரக்கன்று நட நிர்ணயிக்கப்பட்டு முதற்க்கட்டப் பணியாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவேரி கூக்குரல் இயக்க நிர்வாகிகள் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments