Disqus Shortname

60 மணிலா உற்பத்தி விவசாயிகளுக்கு மண் பரிசோதிக்கப்பட்டு உரம் வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் 29-01-2019
உத்திரமேரூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரம் விவசாயிகளைக்
கொண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த
விவசாயிகளின் முக்கிய பயிராக மணிலா வேற்கடலை பயிர் உற்பத்தி
செய்யப்பட்டு வருகிறது. இந்த மணிலா வேற்கடலை பயிர் விளைச்சல்
அதிகம் ஏற்படுத்திடும் வகையில் மண் தரம் பரிசோதனை செய்யப்பட்டு
மகசூல் அதிகம் பெற 60 விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி 29-01-2019
நடந்தது. நிகழ்ச்சியில் உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சோழனூர்
மா.ஏழுமலை தலைமை தாங்கினார். நிறுவன இயக்குநர்கள் கோபால்,
பரசுராமன், வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர்
அருள்பிரகாசம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை விற்பனை
மற்றும் வணிகத்துறையின் துணை இயக்குனர் முருகன் கலந்து கொண்டு
மணிலா உற்பத்தியை அதிகரிக்க செய்ய வேண்டியவைகள் குறித்து
விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் மண்
பரிசோதிக்கப்பட்ட 60 விவசாயிகளுக்கு தரமான உரங்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments