Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்நாளில் 24 விண்ணப்பங்கள் விநியோகம்

உத்திரமேரூர் 29 JAN
 உத்திரமேரூர் பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டது. இங்கு 11,462 பெண் வாக்காளர்களும், 10,546 ஆண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் என மொத்தம் 22,019 வாக்காளர்கள் உள்ளனர். பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 9 பொது வேட்பாளர்கள் 9 பெண் வேட்பாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுத்தாக்கலானது நேற்று துவங்கியது. இதையொட்டி பேரூராட்சி வளாகத்தில் பலத்த போலீசார்  பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு பெற வரும் போது அவர்கள் முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு முழுவதும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலை முதல் நாளான நேற்று மட்டும் 24 விண்ணப்பங்கள் வேட்பாளகள் பெற்றுச் சென்றனர். வேட்பு மனுக்கள் யாரும் தாக்கல் செய்யவில்லை.

No comments