Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பருவ மழை இன்றி கருகும் பயிர்கள் விவசாயிகள் கவலை

உத்திரமேரூர் நவ, 29
உத்திரமேரூர் ஒன்றியத்தில் 261 ஏரிகளில் உள்ளன. அதில் பொதுபணித்துறை
கட்டுப்பாட்டில் 94 ஏரிகளும், 167 ஏரிகள் உள்ளாட்சி நிர்வாகங்கள்
கட்டுப்பாட்டிலும் உளளன. இது மட்டுமின்றி தாங்கல். குளம், குட்டை என
ஆங்காங்கே கிராமங்கள் தோரும் நீர்நிலைகளும் ஏராளமாக உள்ளன. இந்நிலையில்  கடந்த ஆண்டு பெய்த கனமழையில் ஏரிகள் உட்பட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி  வழியந்தன. இதனால் பெருமளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் ஏரிகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் சென்ற மழைக்கு கம்மாளம்பூண்டி, அழிசூர், திருவந்தவார், மலையாங்குளம், கட்டியாம்பந்தல் உள்ளிட்ட  பகுதிகளில் உள்ள ஏரிகள் உடைந்து ஊருக்குள் புகுந்தது இதில் திருவந்தவார், மாம்பாக்கம், காட்டுப்பாக்கம், கட்டியாம்பந்தல், புலியூர், அழிசூர்,  மலையாங்குளம், கம்மாளம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பெருமளவு
பாதிக்கப்பட்டது. பாதிப்பு மட்டுமின்றி உத்திரமேரூர் ஒன்றியத்தில்
மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்ப்பட்டலும்
மழையினால் நீர்நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆண்டும் சென்ற ஆண்டைவிட அதிகமான மழை பெய்யும் என்று எதிர்
பார்க்கப்பட்டது. இதை நம்பி அழிசூர் மற்றும் அதை சுற்றியுள்ள
கிராமங்களிலுள்ள சுமார் 100 ஏக்கர் மேல் விவசாய நிலத்தில் விவசாயிகள்
நெல் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் மழை பெய்த்து போனதால்
வைக்கப்பட்டிருந்த பயிர்கள் கருகி வருகிறது. இதனால் கடன் வாங்கியும் நகை உள்ளிட்டவைகளை அடமானம் வைத்து பயிரிட்டுருந்த விவசாயிகளின் பயிர்களும்,
விவசாயிகளின் நிலையும் கேள்விக் குறியாக உள்ளது. பருவ மழை பொய்த்துப்  போனதாலும், மணல் திருட்டு, நீர் நிலைகள் முறையாக பராமரிக்காததாலும், உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்ததால் கிணறுகளில் கூட  தண்ணீர் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எகவே மாவட்ட  நிர்வாகத்தினர் விவசாயிகளின் கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து அழிசூர் பகுதி விவசாயி கன்னியப்பன் கூறியதாவது. பயிர் சாகுபடி செலவுக்கு வங்கிகளில் கடன் கிடைக்காத நிலையில் தனியாரிடம்  அதிக வட்டிக்கு நகையை அடகு வைத்தும், பணம் பெற்று பருவ மழையினை நம்பி விவசாயம் செய்தோம் பருவ மழை பொய்த்ததால் விவசாயம் செய்த பயிர்களை  காப்பாற்ற முடியாமல் உள்ளோம். இதனால் பயிர்கள் காய்ந்து, நிலம்  வெடித்தது. பயிர்கள் கருக தொடங்கியுள்ளது எனவே தமிழக அரசு எங்களின்  வாழவாதாரத்தை கருத்தில் கொண்டு இழப்பீட்டுத் தொகையினை வழங்க வேண்டும்
என்றார்.

No comments