Disqus Shortname

உத்திரமேரூர் நடுத்தெரு ஸ்ரீ.மாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா

உத்திரமேரூர் ஜீலை,29
உத்திரமேரூர் பஜார் வீதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கோவில்
ஸ்ரீ.மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஆடிமாத கூழ்வார்த்தல் திருவிழா
கடந்த 19-ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது.
துவங்கிய நாள் முதல் உற்சவ அம்மன் உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பட்டஞ்சேரி,நீரடி, நல்லூர். வாடாநல்லூர், குப்பைய்யநல்லூர், வேடபாளையம்,
நங்கையர்குளம், அ.பி.சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருவீதி உலா வந்து
பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து நேற்று உத்திரமேரூரில்
டவுன் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தாரதப்பட்டை முழங்க
மேளதாளத்துடன் உற்சவ ஸ்ரீமாரியம்மன் வீடு வீடாக வந்து பக்தர்களுக்கு
காட்சியளித்தார். பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை காட்டி அம்மனை
வழிபாடுநடத்த கூழ் வார்த்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இதைத்
தொடர்ந்து போருந்து நிலையத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்தும், நெய் திபம் ஏற்றியும், கோவிலை வலம் வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று இரவு 2 மணியளவில் உற்ச்சவ அம்மன் கோவிலை வந்தடைந்த உடன் காப்பு அவிழ்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


No comments