Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சியில் சுகாதார திருவிழா

உத்திரமேரூர்
உத்திரமேரூர் பேரூராட்சியில் நேற்று சுகாதார திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவின்
தொடக்கமாக தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வு வளாகத்தில் நாணய கண்காட்சி,
புத்தக கண்காட்சி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான இயற்கை பொருடகள் தயாரிப்புகண்காட்சி, டெங்கு மற்றும் காசநோய் விழிப்புணர்வு கண்காட்சி உள்ளிட்ட பல்வேறுவகையிலான கண்காட்சி நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவமாணவியர்கள் தங்களின் படைப்புக்களை கண்காட்சியில் வைத்து அதற்கான விளக்கங்களைஅளித்தனர். மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்கா குப்பை
என தரம் பிரிக்கப்பட்டு அதிலிருந்து பிளாஸ்டிக் போன்ற மக்கா கழிவுகளைக் கொண்டுசெய்யப்பட்ட கண்கவரும் கலைப்பொருட்களை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. மக்கும்குப்பைகளைக் கொண்டு வீட்டுத் தோட்டம் மூலிகைச்செடி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்புஉள்ளிட்டவைகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு அதன் செய்முறை
விளக்கமளிக்கப்பட்டது. இயற்கை உரம் கொண்டு பயிரிடப்பட்டிருந்த காய்கறிகள்வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவியர்களுக்கிடையே குதிரைஏற்றம், சிலம்பாட்டம், ஏறுதழுவுதல், ஓட்ட பந்தையம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுநிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் மகளிருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில்முழுசுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கோலப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள்
உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள்கலந்து கொண்டு பலவித வண்ணங்களில் கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரூராட்சி வளாகத்தில் கிராமிய கலை நிகழ்ச்சிகளான பொய்கால் குதிரை, பொம்மலாட்டம்,
பரதநாட்டிய மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் யோகா, நாடகம் உள்ளிட்டபல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. போட்டிகளில் கலந்துக் கொண்டஅனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உத்திரமேரூர்பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் சிறப்பாகசெய்திருந்தனர் நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள், மகளீர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்,
மாணவ மாணவியர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்

No comments