Disqus Shortname

கடல்மங்கலம் கிராமத்தில் ரேஷன் கடைக்கு நிரந்த பணியாட்கள் நியமிக்க வேண்டும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

உத்திரமேரூர் ஜன, 26
உத்திரமேரூர் அடுத்த கடல்மங்கலம் கிராமத்தில் நேற்று குடியரசு
தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வட்டார
வளர்ச்சி அலுவலர் மாரிச்சாமி தலைமை தாங்கினார். மண்டல அலுவலர்
சாவித்திரி, வட்டாட்சியர் அகிலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி வரவேற்றார். கூட்டத்திற்கு
சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல
அலுவலர் தனலட்சுமி கலந்து கொண்டார். கிராமத்தில் தெருவிளக்குகள்
முறையாக எரியவைக்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு
முன்னரே புதிய குடிநீர் போர்கள் அமைத்திட வேண்டும், ஏரி அருகே உள்ள
குடிநீர் கிணறினை தூர்வாரி பராமரித்திட வேண்டும், பொது பணித்துறைக்கு
சொந்தமான ஏரியினை தூர்வாரி, கரைகள் பலப்படுத்திட வேண்டும், மேலும்
கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆட்கள் பற்றாக்குறையால் வாரத்திற்கு
ஒரு முறை திறக்கப்படுகிறது. இதனால் கிராம மக்கள் ரேஷன் பொருட்களை
வாங்குவதில் சிறமம் ஏற்படுகிறது எனவே கடல்மங்கலம் கிராமத்திற்கு
தனியாக நிரந்தர பணியாளர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உட்பட பொது மக்கள்
பலர் கலந்து கொண்டனர்.

No comments