Disqus Shortname

அரசு கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

உத்தரமேரூர் 29-01-2019
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வட்ட சட்ட பணிகள் குழு
சார்பில் கல்லூரி மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் 29-01-2019
நடைபெற்றது. முகாமில் கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார்.
உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், வழக்கறிஞர்கள் சந்தானம், ஆர்த்தி,
தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் வட்ட
சட்டப் பணிகள் குழுத் தலைவரும் உத்திரமேரூர் உரிமையியல் மற்றும்
குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான சச்சிதானந்தம் கலந்து கொண்டு
கல்லூரி மாணவியர்களின் கட்டாய கல்வி பெண்களுக்கான உரிமைகள்
மற்றும் கடமைகள், கல்வி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சட்டத்தின்
மூலம் தீர்வு காண்பது, பெண் கல்விக்கு அரசு வழங்கக் கூடிய சலுகைகள்
நீதிமன்றத்தை நாடி பெறும் வழிமுறைகள், கல்லூரியில் ராகிங் செய்தால்
ஏற்படும் பாதிப்புகள் அவ்வாறு ராகிங் செய்பவர்களுக்கு சட்டத்தின் மூலம்
வழங்கபடும் தண்டனைகள், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பின்
தயங்காமல் நீதிமன்றத்தை நாட தங்களது குறைகளை தெரிவிக்கலாம்,
அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும், மேலும் நீதிமன்றத்தின் மூலம்
ஜீவனாம்சம் பெறுவது, செத்தூரிமை பெறுவது போன்றவற்றை குறித்து
விளக்கமளித்தார். நிகழ்வின் போது மாணவியர்களின் சந்தேகங்களுக்கு நீதிபதி  சச்சிதானந்தம் பதில் அளித்தார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள்
தன்னார்வலர்கள் கல்லூரி பேராசிரியிர்கள் மாணவியர்கள் உட்பட
ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட
பணிகள் குழு நிர்வாகி கயல்விழி மற்றும் ஓய்வு பெற்ற மூதுநிலை நிர்வாக
உதவியாளர் இராமலிங்கம் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments