Disqus Shortname

உத்திரமேரூா் நகர கூட்டுறவு கடன் சங்கம் 112-ம் ஆண்டு பேரவைக் கூட்டம்

உத்திரமேரூா்
உத்திரமேரூா் டவுனில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கப்
பேரவைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் சங்க தலைவா்
எம்.கே.பி.வேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர்
பாரிவள்ளல், இயக்குனர்கள் பாரஸ்மல், சசிகுமார், ஜெயவிஷ்ணு
ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி மேளாளர் உமாதேவி
அனைவரையும் வரவேற்றார், முன்னாள் சங்க செயலாளர்
எஸ்.சண்முகசுந்தரம் 112-ம் ஆண்டின் நிறைவு நிர்வாக
அறிக்கையும், கடந்த ஆண்டின் நிகர லாபத்தையும் வரவு செலவு
கணக்குகளை விளக்கி கூறினார். இதில் ரூபாய் - 2 கோடியே 69
லட்சத்து 60 ஆயிரம் நிகர லாபம் என தணிக்கை சான்றின்
அடிப்படையில் அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் போது அ -
வகுப்பு உறுப்பினா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

No comments