Disqus Shortname

உத்திரமேரூரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது

உத்திரமேரூர்
உத்திரமேரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயதொழிலாளர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், கரும்புவிவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் மத்திய, மாநில அரசின்மக்கள் விரோத போக்கை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நேற்றுநடந்தது. போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர்மோகனன் தலைமை தாங்கினார். கம்னியூஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர்பாஸ்கர், மலைவாழ் சங்கம் முருகேசன், மாதர் சங்கம் ரமணி, வாலிபர்சங்கம் தேவகிருபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாகஅம்பேத்கர் சிலை அருகே ஊர்வலமாக துவங்கி பஜார் வீதி வழியாக மத்தியமாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாகசென்றனர். பேரணியின் போது விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்திடு,காஞ்சி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
நிவாரணம் வழங்கிடு, கரும்பு விலை பாக்கியினை உடனே வழங்கிடு,
உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரிடு, 100
நாள்கள் வேலையினை 200 நாட்களாக உயர்த்திடு, வீட்டுமனை பட்டா
இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கி வீடுகள் கட்டிக் கொடுத்திடு, ரேஷன்
கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைத்திட செய்திடு,
படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கிடு, பொது
துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிடுக உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. பேரணியானது
பஸ் நிலையம் அருகே வந்த போது அங்கு உத்திரமேரூர் செங்கல்பட்டு
சாலையில் அரசு பஸ்சை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும்
மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து
வைத்தனர். இச்சம்பவத்தால் உத்திரமேரூர் செங்கல்பட்டு இடையே சிறிது
நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments