Disqus Shortname

பைக்கில் சென்றவர் விபத்தில் பலி


உத்திரமேரூர், நவ.3: 
உத்திரமேரூர் அருகே தண்டைரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோயிலை பல்வேறு தரப்பு மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு அருகே மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (50) என்பவர், தனது உறவினரின் காதுகுத்து விழாவிற்கு தண்டைரை பச்சையம்மன் கோயிலுக்கு தனது பைக்கில் வந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் சென்று கொண்டிருந்தார். அப்போது அம்மையப்பநல்லூர் கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாலசுப்பிரமணியம் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு 108 வாகனம் மூலம் உத்திரமேரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.