Disqus Shortname

உத்தரமேரூர் அருகே குடிநீர் கிணற்றிற்குள் விழுந்த இருவர் பலி

உத்தரமேரூர், செப். 28


உத்தரமேரூர் அருகே கடம்பூர் கிராமம் உள்ளது.  இப்பகுதி மக்களுக்கு கடம்பூர் ஏரியில் தரை கிணறு அமைத்து மோட்டார் மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்பபட்டு வீடு  குழாய்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவது வழக்கம். இதே பகுதியை சேர்ந்த பெருமாள் 48 இங்கு பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த மூன்று வராங்களாக தொடர் மின் வெட்டு ஏற்பட்டு வந்தது மேலும் இந்த நீர்முழ்கி மோட்டார் அவ்வப்போது பழுதாவது வழக்கம், இதனால் ஞாயிற்றுகிழமையன்று வேறு மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பதற்காக பெருமாளும் இதே கிராமத்தை சேர்ந்த பாபு(24)  என்பவரையும் உதவிக்கு அழைத்து சென்றிருந்தார். கிணறு மேல் உள்ள தளம் மீது ஏரினார்கள், அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றின் மேல்தளம் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதில் பெருமாள், பாபு ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி கிணற்றுக்குள் விழுந்தனர். இதில் இவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இரவு நேரம் என்பதால் யாருக்கும் தகவல் தெரியவில்லை. இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இந்நிலையில் திங்கள் கிழமையன்று  காலையில் பெருமாளையும், பாபுவையும் காணவில்லையே என அவரது உறவினர்கள் தேடினர். அப்போது  கிணற்று பகுதிக்கு சென்று பார்த்த போது இருவரும் கிணற்றுக்குள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து உத்தரமேரூர் தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு  விரைந்தனர். சுமார் நான்கு நேரம் போராட்திற்கு பிறகு இருவரின் சடலங்களை கைப்பற்றினர், இதை கண்ட உறவினர்கள் இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி பொதுமக்களும் சாலை மறியிலில் ஈடுபட்டனர் ஆதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது, பிறகு  பரிசோதனைக்காக சடலங்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து உத்தரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments