Disqus Shortname

உத்திரமேரூர் அடுத்த பட்டா கிராமத்தில் தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு கூட்டம் மற்றும் கிராம தூய்மை பணி

உத்திரமேரூர் செப், 17
உத்திரமேரூர் அடுத்த பட்டா கிராமத்தில் மத்திய அரசின் தூய்மை பாரத
இயக்க திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு கூட்டம்
மற்றும் பொது இடங்கள் தூய்மை செய்யும் பணிகள் நடந்தது. நிகழ்ச்சியில்
வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிச்சாமி தலைமை தாங்கி
சிறப்புரையாற்றினார். தூய்மை பாரத இயக்கத்திட்ட ஒருங்கிணைப்பாளர்
சுரேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ரமேஷ் அனைவரையும்
வரவேற்றார். விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர்,
கிராம மக்கள் தங்களது வீடுகள் மற்றும் கிராமங்களில் உள்ள பள்ளிகள்,
கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர்நிலைகள்
மற்றும் இதர பொது இடங்களில் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் பயன்படுத்தக்
கூடாது. கிராமப்புறங்களில் அனைவரும் கழிப்பறையைப் பயன்படுத்த
வேண்டும், கை கால்களை சுத்தமாகக் கழுவுதல் மற்றும் இதர சுகாதார
பழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து
விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து பட்டா கிராமத்தில் உள்ள
கோவில்கள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார நிலையங்கள், நீர்நிலைகள்
என பல்வேறு இடங்களில் தூய்மை பணியில் பொது மக்கள் ஈடுபட்டு
தூய்மைபடுத்தினர். தூய்மை பணியின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்
மாரிச்சாமி கிராம மக்களோடு இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.
இதையடுத்து குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்
கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments