Disqus Shortname

அம்மையப்பநலலூர் கிராமத்தில் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உத்திரமேரூர்: 20-01-2019
உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள்
பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ.ஆதிகேசவப்பெருமாள்
கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த சில ஆண்டுகளாக சிதலமடைந்து காணப்பட்டது. கிராம மக்கள் மற்றும் விழா குழுவினரோடு இணைந்து கோவிலை புணரமைக்க தீர்மாணிக்கப்பட்டு புணரமைக்கும் பணியினை துவங்கியது. புணரமைக்கும் பணியானது சில மாதங்களாக நடைப்பெற்று வந்த நிலையில், அண்மையில் பணி முடிவடைந்தது. இதனையடுத்து நேற்று கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களும் புண்யாவாசனம், வாஸ்துஹோமம், சாந்தி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு
ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து நேற்று காலை
மூன்றாம்கால யாக பூஜை முடிந்தபின் மேளதாளங்கள் முழுங்க
வானவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது ஊற்றி
தீபாராதனை காண்பித்த பின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க கும்பாபிஷேக வெகு விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஸ்ரீதர், கோவர்தனன், பிரசன்னா மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இரவு கோவில் வளாகத்தில் ஸ்ரீஆதீகேசவப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் ஊஞ்சல் உற்சவ சேவை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் தீபாராதனை காட்டி சுவாமியை வழிபட்டனர். விழாவையொட்டி சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

No comments